மாஸ் காட்டும் "டொவினோ தோமஸ்!"

தன் நடிப்பாலும், தன் அழகாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் பிரபல மலையாள நடிகர் "டொவினோ தோமஸ்". "கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்", "கல்கி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள கனவு நாயகனாக திகழும் நடிகர் துல்கர் சல்மானுடன் "சார்லி", "ஏபிசிடி" என்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாளத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழும் நடிகர் மோகன்லாலுடன் "லூசிபர்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் அசுரன் நாயகனான தனுஷ் நடிப்பில் வெளியாகிய "மாரி2" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இத்திரைப்படத்தில் இவர் வில்லனாக தோன்றி நடிகர் தனுஷ் மற்றும் தமிழ் ரசிகர்களை அசர வைத்திருந்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை செய்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
#Kala#കള pic.twitter.com/o275VL7TfC
— Tovino Thomas (@ttovino) February 20, 2021