ஏப்ரல் 14ல் ஹாட்ஸ்டாரில் மாஸ் நடிகரின் படம்: என்னவாக இருக்கும்?

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் முக்கிய படங்கள் வெளியாகாமல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் சூரரைப்போற்று க/பெ ரணசிங்கம் உள்பட ஒரு சில பெரிய படங்களும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் திரையரங்கில் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கி வருகின்றனர். திரையரங்குகளுக்கு கூட்டம் வராமல் இருப்பதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 

ott

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மாஸ் நடிகரின் படம் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் எந்த படமாக இருக்கும் என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது 

கார்த்திக்கின் சுல்தான், விஜய்யின் மாஸ்டர், விஷாலின் சக்ரா, உள்பட பல திரைப்படங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படம் எதுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web