மனைவி, மகள்களுடன் வாழும் சீனுராமசாமிக்கு திருமணமா? அதிர்ச்சி தகவல்

 

பிரபல இயக்குனர் சீனு ராமசாமிக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகி அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திடீரென அவருக்கு திருமணம் நடந்ததாக தற்போது அவரது டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதனை அடுத்து தவறுக்கு வருந்துகிரோம் என சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்’என குறிப்பிட்டுள்ளார். 

இந்த விளக்கத்தை அடுத்து சீனு ராமசாமி திருமணம் குறித்த வதந்தி கடந்த சில மணி நேரங்களாக டுவிட்டரில் பரவி வந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது

இந்த நிலையில் சீனு ராமசாமி தற்போது இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டு வருகிறார் என்பதும் ஏற்கனவே இயக்கிய ’மாமனிதன்’ மற்றும் ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web