ராஜா ராணி நடிகருக்கு திருமணம்... மனைவி இந்த சீரியல் நடிகைதானாம்!!!

 ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் சித்துவிற்கு விரைவில் சீரியல் நடிகையுடன் திருமணம்
 

ராஜா ராணி என்ற சீரியலில் முதலில் ஜோடியாக நடித்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா. சீரியல் மூலம் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் ஆனார்கள்.

பின் திருமணமும் செய்தார்கள், இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா, சித்து என்ற நடிகருடன் இணைந்து நடித்து வருகிறார்.

சித்து இதற்கு முன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார். ஸ்ரேயா என்பவருடன் சித்து இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

சித்து-ஸ்ரேயா விரைவில் திருமணமும் செய்ய உள்ளார்கள். காதலே காதலே என்ற காதலர் தின நிகழ்ச்சியிலும் அவர்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

From around the web