மூக்குத்தி அம்மன் பட எடிட்டருக்கு திருமணம்: தனுஷ் வாழ்த்து!

 

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்த ஆர்கே செல்வா என்பவர் தான் நீண்ட நாளாக காதலித்து வந்த அனிதா என்ற பெண்ணை மணந்தார் அனிதா யோகா கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது 

rk selva

மூக்குத்தி அம்மன் படம் மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த பிஸ்கோத் படத்திற்கும் இவர்தான் எடிட்டர் என்பதும். மேலும் இவர் ஏற்கனவே இவன் தந்திரன், பூமராங், காலக்கூத்து, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, எல்கேஜி உள்பட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் தற்போது அவர் எடிட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ணன் படத்தின் எடிட்டரை ஆர்கே செல்வாவுக்கு திருமணம் ஆனதை அடுத்து கர்ணன் பட நாயகன் தனுஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எடிட்டர் ஆர்கே செல்வா தனது மனைவியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web