மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் இளம் நடிகர்: வைரலாகும் புகைப்படம்!

பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு அந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது என்பதும் உலக அளவில் அந்த படம் சிறப்பாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாரி செல்வராஜின் இரண்டாவது படமான தனுஷின் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலா வந்தது என்பதும் அவரது அடுத்த படத்தின் ஹீரோ விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்று செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ்விக்ரம் நடிக்க உள்ளதாகவும் இது ஒரு ரொமான்ஸ் கலந்த சமூக அக்கறை கொண்ட ஒரு திரைப்படம் என்றும் இந்த படமும் வழக்கம்போல் கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது
மேலும் மாரி செல்வராஜ் மற்றும் துருவ்விக்ரம் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது