தனுஷின் ‘கர்ணன்’ படம் கொடுத்த சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பது இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கர்ணன் படம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது டுவிட்டரில் சூப்பர் அப்டேட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தனுஷின் கர்ணன்
 

தனுஷின் ‘கர்ணன்’ படம் கொடுத்த சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பது இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்ணன் படம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது டுவிட்டரில் சூப்பர் அப்டேட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தனுஷின் கர்ணன் படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 28ஆம் தேதி வெளிவரும் என்றும் அதனுடன் சேர்த்து முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

மேலும் இந்த படத்தின் மேக்கிங் குறித்த அட்டகாசமான புகைப்படங்களும் வெளியாகும் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது போல் இந்த படமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தனுஷின் ‘அசுரன்’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web