மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்யும் மன்சூர் அலிகான்!இந்த முறை வழங்கப்படுமா முன்ஜாமீன்?

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்!
 
மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்யும் மன்சூர் அலிகான்!இந்த முறை வழங்கப்படுமா முன்ஜாமீன்?

மக்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் நடித்த ஒவ்வொரு படத்திலும் காமெடியோடு கருத்தினை மையமாகக் கொண்டு அவர் நடித்திருப்பார். சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்து அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தார். மேலும் அவர் இறப்பதற்கு முன் தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினத்திற்கு முந்தைய நாள் அவர் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

vivek

 அவரின் மரணத்தின் போது சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பிரபல வில்லன் மன்சூரலிகான் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறினார். மேலும் அவர் செய்தியாளர் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசியிருந்தார். மேலும் அவர் மீது கொரோனா தடுப்பூசி  குறித்து அவதூறு பரப்புவதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் போடப்பட்டு, வடபழனி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர் அதற்கெதிராக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அவர் தற்போது மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன் மீது சென்னை வடபழனி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் மன்சூரலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

From around the web