மணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றி எங்களுக்கு சம்பந்தமில்லை- மத்திய அமைச்சர்

சிறுபான்மையினர் அதிக அளவில் இந்தியாவில் தாக்கப்படுவதாகவும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற போக்கு நிலவுவதாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 40 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்ற நபர் பீகார் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். இவர்கள் அமைதியின்மையை குழைக்கும் வகையில் இது போல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்பது அவரது மனுவின் சாராம்சம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை
 

சிறுபான்மையினர் அதிக அளவில் இந்தியாவில் தாக்கப்படுவதாகவும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற போக்கு நிலவுவதாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 40 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

மணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றி எங்களுக்கு சம்பந்தமில்லை- மத்திய அமைச்சர்

இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்ற நபர் பீகார்  நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். இவர்கள் அமைதியின்மையை குழைக்கும் வகையில் இது போல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்பது அவரது மனுவின் சாராம்சம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு இட்டதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49  பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது தனிப்பட்ட முறையில் கோர்ட் எடுத்த முடிவு.

மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார்

From around the web