மணிமேகலை கண்ணீர் விட்ட... இல்ல இல்ல விட வைத்த தொலைக்காட்சி!!!!
மணிமேகலை அனைவரின் முன்பு பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்டு அழுத வீடியே வெளியாகியுள்ளது.
Thu, 11 Feb 2021

வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் வருகிறது. காதலர்கள் தயாரானார்களா என்பது தெரியவில்லை, ஆனால் தொலைக்காட்சிகள் ரெடி.
எல்லா தொலைக்காட்சிகளிலும் காதலர் தினத்திற்காக ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை படமாக்கியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியிலும் நிஜமான ஜோடி பிரபலங்களை வைத்து காதலே காதலே என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சியின் புரொமோ வெளியாக அதில் ஒன்றில் மணிமேகலை தனது கணவரை பார்த்து கண்ணீர்விட்டு அழுது தனது மனதில் இருப்பதை கூறியுள்ளார்.