மங்காத்தா இரண்டாம் பாகம் வருகிறதா

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்து வெற்றிவாகை சூடிய படம் மங்காத்தா. அஜீத்குமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டைலான அஜீத் படமாகவும் அதே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இது இருந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும் பலத்தை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு. மங்காத்தா-2 படத்தை
 

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்து வெற்றிவாகை சூடிய படம் மங்காத்தா. அஜீத்குமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டைலான அஜீத் படமாகவும் அதே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இது இருந்தது.

மங்காத்தா இரண்டாம் பாகம் வருகிறதா

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும் பலத்தை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு.


மங்காத்தா-2 படத்தை எடுக்கும்படி ரசிகர்களும் வெங்கட் பிரபுவிடமும் வற்புறுத்தி உள்ளனர். இதனால் மங்காத்தா-2 உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அஜித்குமார் தற்போது இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு மங்காத்தா-2 பற்றி படக்குழுவினர் யோசிப்பார்கள் என்று தெரிகிறது.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, “மங்காத்தா-2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பூர்த்தி செய்ய முடியுமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2-ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

From around the web