சிம்பு பிறந்தநாளன்று செம ட்ரீட்... மாநாடு டீசர் வெளியீடு

யாரும்‌ என்‌ பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌.
 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதுபற்றி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் "நான் வெளியூர்‌ செல்கிறேன்‌. அதனால்‌ நண்பர்கள்‌ யாரும்‌ என்‌ பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌. உங்களை நேரடியாக சந்திக்கும்‌ நிகழ்வை விரைவில்‌ ஒருங்கிணைப்பேன்‌. நாம்‌ சந்திப்போம்‌. ஒரு சிறு மகிழ்ச்சியாக என்‌ பிறத்தநாளன்று "மாநாடு" டீசர்‌ வெளியாகும்‌. பார்த்து மகிழுங்கள்" என்று கூறியிருந்தார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'மாநாடு' . கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் டீசரை நாளைய தின மதியம் 2:34 மணிக்கு பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்.

From around the web