லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனன்

 

லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

கமலஹாசன் நடித்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கமல்ஹாசனின் 232வது திரைப்படமான இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் கமல்ஹாசன் படத்தை முதன்முதலாக இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் திரைப் படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் லோகேஷ் கனகராஜ்க்கு தெரிவித்துள்ளார் 

கமல்ஹாசனுடன் பணிபுரிய வேண்டுமென்ற உங்களுடைய கனவு நனைவானது குறித்து எனது வாழ்த்துக்கள். இந்த கூட்டணியை மிகப்பெரிய வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் மாளவிகாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

From around the web