படு காயங்களுடன் விரல் உடைந்த நிலையில் மாளவிகா..

விபத்து ஏற்பட்டதாகவும், விரல்கள் உடைந்து விட்டது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
 

90களில் கலக்கிய நடிகைகள் பலர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அந்த நடிகைகள் லிஸ்டில் ஒருவர் மாளவிகா.

நல்ல நடிகை தான், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அவ்வப்போது அவர் அன்றாடம் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இந்த நிலையில் படு காயங்களுடன் மாளவிகா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். சைக்கிளிங் செய்யும் போது விபத்து ஏற்பட்டதாகவும், விரல்கள் உடைந்து விட்டது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

முகத்தில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)


 

From around the web