விஜய் படத்தை இயக்கும் மகிழ்திருமேனி: கிட்டத்தட்ட உறுதியானதால் பரபரப்பு!

 

தளபதி விஜய் நடிக்கும் 65ஆவது திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் திடீரென அந்த படத்திலிருந்து விலகினார் என்பது தெரிய வருகிறது 

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வெற்றிமாறன் உள்பட பல இயக்குனர்கள் பட்டியலில் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது மகிழ்திருமேனி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

உதயநிதி நடிக்கும் படத்தை மகிழ்திருமேனி தற்போது இயக்கி உள்ளார். நவம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் பிப்ரவரி முதல் தளபதி 65 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது 

தன்னுடைய படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று உதயநிதி நிபந்தனை விதித்தால் அவருடைய படத்தை அவசர அவசரமாக முடிக்க மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

From around the web