ஊழியர்களுக்கு ஹோட்டல் வைத்து கொடுத்த தியேட்டர் ஓனர்: பரபரப்பு தகவல்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்ட போதிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி கொடுக்கவில்லை திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு, திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி கொடுக்காதது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சினிமா ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஊழியர்களுக்கு ஹோட்டல் வைத்து கொடுத்த தியேட்டர் ஓனர்: பரபரப்பு தகவல்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்ட போதிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி கொடுக்கவில்லை

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு, திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி கொடுக்காதது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சினிமா ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி திரையரங்குகள் திறந்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரங்கள் மீட்கப்படும் என்ற நிலையில் உள்ள திரையரங்கு ஊழியர்களும் திரையரங்குகள் திறக்கப்படாத குறித்த குறித்து பெரும் சோகத்தில் உள்ளனர்


இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய தியேட்டர் வாசலிலேயே தனது முதலீட்டில் தியேட்டர் ஊழியர்களுக்காக ஒரு ஹோட்டல் வைத்துக் கொடுத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை முழுவதுமே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஹோட்டல் ஊழியர் கூறியுள்ளார்

இதனை அடுத்து தியேட்டர் ஊழியர்கள் அந்த ஹோட்டலை நடத்தி தற்போது வருமானத்தை பெற்று வருகின்றனர். அகஸ்தியா தியேட்டர் போன்று மற்ற தியேட்டர்களும் மூடுவதற்குள் திரையரங்குகள் திறக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

From around the web