மதுரை ஜவுளி கடை தீ விபத்து: உயிரிழந்தவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை 

 

மதுரையில் தீபாவளி சமயத்தில் திடீரென ஜவுளிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது என்பதும் அந்த தீ விபத்தின் போது தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிந்ததே 

இதனை அடுத்து பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர் சிவராஜின் மனைவி குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தருவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சமீபத்தில் அந்த பணமும் உயிரிழந்த சிவராஜின் மனைவி அங்கையர்க்கண்ணி அவர்களுக்கு தமிழக அரசு அளித்தது

suicide

இந்த நிலையில் மதுரை ஜவுளி கடை தீ விபத்து மீட்பு பணியின் போது உயிரிழந்த சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி திடீரென சற்றுமுன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவராஜின் உயிரிழப்புக்கு தமிழக அரசு அறிவித்த ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டை பிரிப்பதில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அங்கையற்கண்ணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த அங்கையற்கண்ணியின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதும், தற்போதைக்கு இந்த வழக்கு தற்கொலை வழக்கு என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web