இவர் தான் மடோனாவின் காதலரா?
முதன் முறையாக தனது காதலர் புகைப்படத்தை நடிகை மடோனா சபாஸ்டியன் வெளியிட்டுள்ளார்.
Fri, 12 Feb 2021

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன்.
இதன்பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா.
நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.