சரோஜா தேவியை கண் முன்னே கொண்டுவந்த மதுமிதா!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது, போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உடைகளை அணிந்து கொண்டு, அவர்களது பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். முதலில் குரூப் டான்ஸ்க்கான பாடல் கொடுக்கப்பட்டது. ஆனால், அபிராமி லேட்டாக வந்ததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. தொடர்ந்து பாத்ரூம் சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான கடைவீதி கலகலக்கும் என்ற பாடல் போடப்பட்டதும் சிறப்பாக
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய 37ஆவது எபிசோடில் போட்டியாளர்களுக்கு போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதாவது, போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உடைகளை அணிந்து கொண்டு, அவர்களது பாடலுக்கு நடனம் ஆட வேண்டும்.


முதலில் குரூப் டான்ஸ்க்கான பாடல் கொடுக்கப்பட்டது. ஆனால், அபிராமி லேட்டாக வந்ததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. தொடர்ந்து பாத்ரூம் சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான கடைவீதி கலகலக்கும் என்ற பாடல் போடப்பட்டதும் சிறப்பாக ஆடி முடித்தார் சரவணன். 

சரோஜா தேவியை கண் முன்னே கொண்டுவந்த மதுமிதா!

இவரைத் தொடர்ந்து ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். 3ஆவதாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார். 


இவர்கள் வரிசையில், 4ஆவதாக லோஸ்லியா கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடலுக்கு த்ரிஷா ஸ்டைலில் நடனம் ஆடினார். த்ரிஷாவைத் தொடர்ந்து சிம்பு வந்தார். சாண்டி அவருக்குரிய ஸ்டைலில் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து தத்தை தத்தை தத்தை என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.

இறுதியில், சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா ஒரு பெண்ணை என்ற பாடலுக்கு அந்த காலகட்டத்திற்கு ஏற்ப டான்ஸ் ஆடினார், அதுமட்டுமன்றி அனைத்து நேரங்களிலும் சரோஜா தேவி போலவே செய்கைகள் செய்து அசத்தினார் மதுமிதா. 

From around the web