எத்தனை கோடி கொடுத்தாலும் ஓடிடியில் ரிலீஸ் இல்லை: மாதவன் உறுதி

பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் தமிழ் உள்பட மொத்தம் எட்டு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் இந்த
 

எத்தனை கோடி கொடுத்தாலும் ஓடிடியில் ரிலீஸ் இல்லை: மாதவன் உறுதி

பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் தமிழ் உள்பட மொத்தம் எட்டு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை அமேசான் நிறுவனம் விலைக்கு கேட்டதாகவும் மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுக்க முன் வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட சம்மதிக்க மாட்டேன் என்றும் திரையரங்குகளில் தான் இந்த படம் வெளிவரும் என்று மாதவன் கூறியதாக தெரிகிறது

மாதவன் இந்த படத்தின் மீது வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கை மட்டுமின்றி, நம்பி நாராயணன் அவர்களுக்கு செய்யும் காணிக்கையாக இந்த படத்தைதான் எடுத்ததாகவும், எனவே திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய தான் முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

From around the web