மாரி செல்வராஜிற்கு பிறந்த குவா குவா ஆண் குழந்தை....

மாரி செல்வராஜ்  மனைவி இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததுடன் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றது. இப்போது இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கர்ணன் படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் படம் வெளியாக இருக்கிறது. கர்ணன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு மிகவும் நெருக்கமான, முக்கியமான ஒரு திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் என்னிடம் இருந்தும் என்னுடன் பயணித்தவர்களிடம் இருந்து பெரும் விடாமுயற்சியை எதிர்ப்பார்த்தது. 

அதை சாத்தியமாக்கிய தனுஷ், தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் உதவி இயக்குநர்கள், எனது கிராம மக்கள் அனைவருக்கும் நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார். இயல்பிலேயே சமூக அக்கறை மிகுந்த மனிதராக திகழும் மாரிசெல்வராஜூக்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு சிறிய மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. 

அவரது மனைவி இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதன் கீழே பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web