கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்த லைகா:

இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்தால் தமிழ் சினிமா உலகம் பெரும் அதிர்ச்சியில் இருந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பின் விபத்திற்கு லைக்கா நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இனியாவது பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு வர முடியும் என்றும் கமலஹாசன் கடிதம் எழுதியதாக தெரியவந்தது இந்த நிலையில் கமல்ஹாசன் கடிதத்துக்கு லைக்கா நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதில் கடிதத்தில் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: உங்களின் கடிதத்திற்கு
 
கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்த லைகா:

இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்தால் தமிழ் சினிமா உலகம் பெரும் அதிர்ச்சியில் இருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பின் விபத்திற்கு லைக்கா நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இனியாவது பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு வர முடியும் என்றும் கமலஹாசன் கடிதம் எழுதியதாக தெரியவந்தது

இந்த நிலையில் கமல்ஹாசன் கடிதத்துக்கு லைக்கா நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதில் கடிதத்தில் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: உங்களின் கடிதத்திற்கு முன்பாகவே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் எந்த குறையும் வைக்கவில்லை.

லைகா நிறுவனம் உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும்தான் முழுப்படப்பிடிப்பும் இருந்தது என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

From around the web