கமலஹாசனை அடுத்து நிதி உதவி செய்த லைகா

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேற்று இரவு மூன்று பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூவரின் குடும்பத்திற்கு நிதி உதவியும் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இன்று மாலை கமல்ஹாசன் மறைந்த மூவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேட்டியளித்த போது தனது தரப்பிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளிப்பதாகவும் மூவரின் குடும்பத்திற்கு இது சற்று ஆறுதலை அளிக்கும் என நம்புவதாகவும் கூறினார் இந்த நிலையில் இந்தியன் 2’
 
கமலஹாசனை அடுத்து நிதி உதவி செய்த லைகா

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேற்று இரவு மூன்று பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூவரின் குடும்பத்திற்கு நிதி உதவியும் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இன்று மாலை கமல்ஹாசன் மறைந்த மூவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேட்டியளித்த போது தனது தரப்பிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளிப்பதாகவும் மூவரின் குடும்பத்திற்கு இது சற்று ஆறுதலை அளிக்கும் என நம்புவதாகவும் கூறினார்

இந்த நிலையில் இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதுதவிர ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web