ராட்சசன் இயக்குனரின் தாமதத்தால் கார்த்திக் நரேனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்காக ஒரு குறிப்பிட்ட தேதிகளை தனுஷ் கால்ஷீட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. 

இந்த நிலையில் இயக்குனர் ராம்குமார் இன்னும் திரைக்கதையை எழுதி முடிக்கவில்லை என்று கூறப்படுவதால் தனுஷ் கொடுத்த கால்ஷீட் வீணாகி விடுமோ என்ற பயம் சத்யஜோதி பிலிம்ஸ்க்கு இருந்தது. 

இதனை அடுத்து ராம்குமார் தனக்குத் தேவையான காலத்தை எடுத்துக் கொள்ளட்டும். அந்த படத்திற்காக கொடுத்த கால்சீட்டை அப்படியே கார்த்திக் நரேன் படத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தனுஷ் கூறியுள்ளார் 

கார்த்திக் நரேன்-தனுஷ் படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிப்பதால் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கார்த்திக் நரேன் இந்த படத்தை அடுத்த ஆண்டு தான் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது அதிர்ஷ்டவசமாக தனுஷின் கால்ஷீட் முன்கூட்டியே கிடைத்துவிட்டதால் தனுஷின் அடுத்த படம் கார்த்திக் நரேன் இயக்கும் படம்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

From around the web