மார்க்கெட் போன நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஐஸ்வர்யாராய் ஜோடி

 

ஒரு காலத்தில் விஜய் அஜித்திற்கு இணையாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் எடுத்த சில தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை முடிவு மற்றும் திரைப்படங்களை சரியாக தேர்வு செய்யாதது ஆகியவற்றால் மார்க்கெட்டை இழந்த அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க திணறி வருகிறார்

இந்த நிலையில் பிரசாந்தை மீண்டும் களத்தில் இறக்க முடிவு செய்துள்ள அவரது தந்தை தியாகராஜன் தற்போது பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை முதலில் மோகன்ராஜா இயக்குவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது பொன்மகள் வந்தாள் இயக்குனர் பெடரிக் இயக்கவிருப்பதாக தெரிகிறது 

இந்த நிலையில் இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து இந்தப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகிய இரண்டு ஜீன்ஸ் என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web