கட்டுக்கதையை கமல்ஹாசனையே நம்ப வைத்த லோஸ்லியா!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கடந்தவாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது. வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். முதலாவது விசாரணையாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார். கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா
 
கட்டுக்கதையை கமல்ஹாசனையே நம்ப வைத்த லோஸ்லியா!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கடந்தவாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது.

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். முதலாவது விசாரணையாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார்.

கட்டுக்கதையை கமல்ஹாசனையே நம்ப வைத்த லோஸ்லியா!!

கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றார்.

மேலும் தான் அவரிடம் அதிக அளவு அன்பினை எதிர்பார்ப்பதனால் மட்டுமே இவ்வளவு கஷ்டமாக உள்ளது எனவும், இல்லையேல் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

அவர் பேசினால் தான் காதில் தேன் வழியும்படி இருக்குமே, அதனாலோ என்னவோ அது சரி எனவே ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் பார்வையாளர்கள் பலரும் கவினை நாமினேட் செய்த பிறகிலிருந்தே சேரனிடம் பேசவில்லை என்பதனை வலியுறுத்தினார்.

From around the web