10 வருடங்கள் கழித்து தந்தையைப் பார்த்த லோஸ்லியா!!

நேற்றைய நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமிலிருந்த சேரன் விக்ரம் வேதா பாடல் இசையுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் லாஸ்லியாவின் 2 தங்கைகளும், அம்மாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். லாஸ்லியா அந்த ஒரு விஷயத்தைத் தவிர, அனைத்து விஷயத்திலும் சரியாகவே இருக்கிறார் என தங்கைகள் கூறினர். என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும், ஆனால் இந்த லோஸ்லியா இப்போது என் லோஸ்லியாவாக இல்லை. நீ பழைய லோஸ்லியாவாக இருக்க வேண்டும் என அவர் தாயார் உணர்ச்சி பொங்க
 
10 வருடங்கள் கழித்து தந்தையைப் பார்த்த லோஸ்லியா!!

நேற்றைய நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமிலிருந்த சேரன் விக்ரம் வேதா பாடல் இசையுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பின்னர் லாஸ்லியாவின் 2 தங்கைகளும், அம்மாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். லாஸ்லியா அந்த ஒரு விஷயத்தைத் தவிர, அனைத்து விஷயத்திலும் சரியாகவே இருக்கிறார் என தங்கைகள் கூறினர்.

10 வருடங்கள் கழித்து தந்தையைப் பார்த்த லோஸ்லியா!!

என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும், ஆனால் இந்த லோஸ்லியா இப்போது என் லோஸ்லியாவாக இல்லை. நீ பழைய லோஸ்லியாவாக இருக்க வேண்டும் என அவர் தாயார் உணர்ச்சி பொங்க கூறினார்.

மூன்று பேரும் வெளியே உள்ள சோபாவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்க, மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்னும் தங்க மீன்கள் படத்தின் பாடல் ஒளிபரப்பானது. அதைக் கேட்ட லோஸ்லியாவிற்கு தன் தந்தையின் வருகைதான்போல எனத் தெரிந்தது.

உள்ளே இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர், லோஸ்லியா தனது அப்பாவைக் பார்த்ததும் அப்பா என்று கூறி, கதறி அழுதார்.

லோஸ்லியா அவரது காலில் விழுந்து கதறி அழுதார். 10 வருடங்கள் கழித்து பார்த்த லோஸ்லியா கதறி அழுதது, அனைவரையும் கலங்கடிக்கவே செய்தது. அதன்பின்னர் போட்டியாளர்கள் அனைவருக்கும் கை கொடுத்தார்.


From around the web