பேசவே பேசாத ஷிவானிக்கு வந்த லவ் மூட்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 25 நாட்கள் ஆகியும் கடந்த சில நாட்கள் தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் ஷிவானி பேசாமல் ஊமையாக இருந்தது அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத்தான் ஷிவானி வாயைத் திறந்து பேச ஆரம்பித்துள்ளார். ஆனால் நேற்றும் இன்றும் அவர் ரொமான்ஸ் மூடில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது 

நேற்றே பாலாஜியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று ஷிவானி ஒரு டூயட் பாடலை பாலாஜி முன் பாடுகிறார். நேற்றைய டாஸ்க் ஒன்றில் பாலாஜி-அர்ச்சனா கூட்டணி ஜெயித்ததால் மற்ற போட்டியாளர்களை அவர்கள் வேலை வாங்கி வருகின்றனர் 

அந்த வகையில் ஷிவானி தனக்கு குடை பிடிக்க வேண்டும் என்று பாலாஜி கூற பாலாஜி செல்லும் இடங்களுக்கு எல்லாம் குடை பிடித்துக்கொண்டே அவர் பின்னால் செல்கிறார் ஷிவானி. அப்போது அவர் ரொமான்ஸ் பாடல் பாடிக்கொண்டே அதற்கு அவர் தருகிற எக்ஸ்பிரஸன் உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

இனிவரும் நாடிகளில் ஷிவானியும் மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான ஒரு போட்டியாளராக மாறுகிறார் என்பது தெரியவருகிறது


 

From around the web