13 ஆண்டுகளுக்கு பின் தற்செயலாக சந்தித்த ‘காதல்’ ஜோடி:

 

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் பரத். இவர் ’காதல்’ உள்பட பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் 

பரத் தற்போது நடித்து வரும் 8, நடுவன், ராதே, 6 ஹவர்ஸ் உள்பட ஒருசில திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் நடித்த திரைப்படம் ’காதல்’. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

bharath santhiya

இந்த நிலையில் இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் சந்தியா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் சந்தித்துக் கொண்டதை அடுத்து கடந்த 13 ஆண்டுகளாக இருவரும் சந்திக்க வில்லை

இந்த நிலையில் தற்போது தற்செயலாக ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து தாங்கள் நடித்த ’காதல்’ படத்தின் மலரும் நினைவுகளில் மூழ்கினார். மேலும் பரத் சந்தியாவுடன் எடுத்துக்கொண்ட செல்பியும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு பின் ’காதல்’ படத்தில் ஜோடி மீண்டும் சந்தித்து கொண்டது ஆச்சரியம் அளிக்கின்றது. சந்தியா தற்போது திருமணம் செய்து கணவர் மற்றும் குழந்தையுடன் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web