காதல் பத்திக்கிச்சு: கேப்ரில்லாவை கவர்ந்த காதலன் யார்?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு மட்டுமின்றி அவ்வப்போது ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெறும் என்பதை கடந்த மூன்று சீசன்களில் இருந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை எந்த ரொமான்ஸ் காட்சியும் இல்லாத நிலையில் முதல் முதலாக தற்போது ஒரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பித்துள்ளது

பெரும்பாலான நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஜோடிக்கு காதல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி தற்போது கேப்ரில்லா மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடையே காதல் பற்றிக் கொண்டதாக தெரிகிறது 

கேப்ரில்லாவை பாலாஜி கிண்டல் செய்ய அதற்கு கேப்ரில்லா நாணத்தோடு சிரிக்க பின்னணியில் ’யாரோ யாருக்குள் இங்கு யாரோ’ என்ற பாடல் ஒலிக்க ஒரே ரொமான்ஸ் மயமாக என்ற மூன்றாவது புரமோ உள்ளது. இந்த காதல் ஜோடி உண்மையாகவே காதல் ஜோடியாக நீடிக்குமா அல்லது கவின், லாஸ்லியாவின் காதல் போல் நாடக காதலா என்பது போகப்போகத்தான் பார்க்க வேண்டும்


 

From around the web