கவின் குறித்து பேச எனக்கு எந்த அவசியமும் இல்லை - லாஸ்லியா

கவினுடனான காதல் எந்த நிலையில் இருக்கிறது என லாஸ்லியா பேச மறுத்து வருகிறார்.

 

பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்களாக மக்களால் கொண்டாடப்பட்டவர்கள் கவின்-லாஸ்லியா. இவர்கள் நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக தான் பழகி வந்தார்கள்.

ஆனால் வெளியே வந்த பிறகு இருவரும் சந்திப்பது இல்லை. மக்கள் மத்தியில் இருவரும் காதலிப்பது உண்மை தான் அவர்கள் தான் வெளியே கூற மறுக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு இருக்கிறது.

இதுகுறித்து முதன்முறையாக லாஸ்லியா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், கவினுடன் எனக்கு இருக்கும் உறவு எல்லாம் எங்களுடைய சொந்த விஷயம்.

மக்கள் என்னுடைய படங்கள் பற்றி மட்டும் மக்கள் கேட்கலாம். இனி எந்த இடத்திலும் கவின் குறித்து பேச எனக்கு அவசியம் இல்லை என கூறியுள்ளார்.


 

From around the web