லாஸ்லியாவின் 3வது படம் குறித்த அறிவிப்பு: நாயகன் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற லாஸ்லியா, அந்த நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் ஏற்பட்டதால் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மாறினார். ஆனால் அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் கவின் காதல் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லாஸ்லியாவின் காதல் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அரங்கேற்றப்பட்ட நாடகமாகவும் கருதப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியா ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,
 
லாஸ்லியாவின் 3வது படம் குறித்த அறிவிப்பு: நாயகன் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற லாஸ்லியா, அந்த நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் ஏற்பட்டதால் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மாறினார். ஆனால் அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் கவின் காதல் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லாஸ்லியாவின் காதல் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அரங்கேற்றப்பட்ட நாடகமாகவும் கருதப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியா ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நயன்தாராவின் ’மாயா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆரி நடிக்கும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தற்போது லாஸ்லியா நடிக்கயிருக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. லாஸ்லியா நடிக்க இருக்கும் இந்தப்படத்தில் இந்த படத்தை ராஜா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். பூரணேஷ் என்பவர் நாயகனாக நடிக்கும் இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் இந்தப் படம் இதுவரை தமிழில் வெளிவராத வித்தியாசமான ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டெல்லிபாபு தயாரிக்கும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

From around the web