பச்சையா தெரியுது, அர்ச்சனா போன பின்னரும் பிரியாத அன்பு டீம்!

 

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் 6 பேர் இருந்த நிலையில் அந்த கூட்டணியை எதிர் அணியை சேர்ந்த பாலா அதிரடியாக உடைத்தார். பாலா மற்றும் அனிதா ஆகிய இருவரும் திட்டம் போட்டு உடைத்ததன் காரணமாக தற்போது அந்த கூட்டணியில் மூன்று பேர் மட்டுமே உள்ளனர் 

இருப்பினும் அர்ச்சனா வெளியேறிய பின்னரும் தற்போதும் லவ்பெட் அணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சோம், ரியோ மற்றும் கேபி ஆகிய மூவரும் எப்பொழுதுமே குரூப்பாகத்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

bala

இந்த நிலையில் நேற்று ஒரு டாஸ்க்கின்போது லவ்பெட் அணியில் உள்ள மூன்று பேர்களையும் பிரிக்க  பாலாஜி திட்டமிட்டு டீம் பிரிக்கும்போது சோம் தலைமையில் ஒரு டீம் மற்றும் கேபி தலைமையில் ஒரு டீம் என அறிவித்தார். இதன் மூலம் அன்பு குரூப்பில் உள்ள மூன்று பேரையும் பிடித்து விடலாம் என்பதே அவரது திட்டமாக இருந்தது 

ஆனால் கேபி தன்னுடைய தலைமையில் டீம் அமைய ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனை அடுத்து வேறு வழியின்றி ஆரி தலைமையில் ஒரு டீம் மற்றும் சோம் தலைமையில் ஒரு டீம் என பிரிக்கப்பட்டது. திட்டமிட்டபடி அன்பு டீமில் இருந்த மூவரும் ஒரே டீமில் இணைந்தனர். இதுகுறித்து கேபி, சோம் இடம் கூறியபோது, ‘பச்சையா தெரியுது பாலா நம்மை பிரிக்க பார்க்கின்றான்’ என்று புலம்பினார்.

நேற்று நடந்த டாஸ்க்கில் ஆரி அணியில் 5 பேர் இருந்தும் அவர்கள் அதிக அளவு பந்துகள் கைப்பற்றப்படவில்லை என்பதும் ஆனால் நான்கு பேர் மட்டுமே இருந்த அன்பு டீமில் சுறுசுறுப்பாக பந்துகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web