லோகேஷ் கனகராஜ், அனிருத் போட்ட சூப்பர் கால்குலேஷன்: பரபரப்பு தகவல் 

 
லோகேஷ் கனகராஜ், அனிருத் போட்ட சூப்பர் கால்குலேஷன்: பரபரப்பு தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் டைட்டில் டிரைலர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கமல்ஹாசனுடன் உரையாடினார்கள்

விக்ரம் படம் குறித்து சுருக்கமாகக் கூறிய லோகேஷ் கனகராஜ், டைட்டில் டிரைலரின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்த கமலஹாசன் அவர்களுக்கு நன்றி என்றும் அபாரமாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்த அனிருத்துக்கு நன்றி என்றும் தெரிவித்தார்

lokesh kamal

மேலும் அவர் கூறியபோது ’கமல்ஹாசன் அவர்கள் 232 படத்தில் நடித்து இருக்கின்றார் என்றால் அவர் எத்தனை நாட்கள் செட்டில் இருந்திருப்பார் என்பதை நானும் அனிருத்தும் கால்குலேஷன் போட்டு பார்த்தோம் என்றும் அப்படிப் பார்க்கும் போது சுமார் 40 ஆண்டுகள் அவர் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே இருந்துள்ளார் என்பதை கண்டு நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம் என்றும் கூறியுள்ளார்

கமலஹாசன் தனது 66வயதில் சுமார் 40 ஆண்டுகள் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து உள்ளார் என்ற லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்தின் கால்குலேஷன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

From around the web