’மாஸ்டர்’ வெற்றிக்காக கோவில் கோவிலாக செல்லும் லோகேஷ்!

 

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி கும்பிட்டு உள்ளார் 

master tiruvannamalai

அவருடன் அவருடைய உதவி இயக்குனர்களும், நடிகர் அர்ஜூன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு முடித்தவுடன் கோவிலுக்கு வெளியே எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில கோவில்களுக்கு செல்லவும் லோகேஷ் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி உள்பட பல பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது படக்குழுவினர்களின் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web