தளபதி 66யை தட்டி தூக்கிய மாஸ்டர்...

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
 

இப்படம் வெளியாகி திரையரங்கிற்கு ரசிகர்கள் படையெடுத்ததை தொடர்ந்து 240 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு படத்தை முடித்த பின்பு தான் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் அவர் அடுத்ததாக எந்த இயக்குனர் உடன் இணையவுள்ளார் என்பது பெரியளவில் பேசப்படும்.

அந்த வகையில் தற்போது தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம், விஜய் சேதுபதி உடன் படம் என பிஸியாக உள்ள நிலையில் தளபதி 66 குறித்த தகவல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

From around the web