நண்பர்களுடன் குட்டி ஃபோட்டோ...!

"ரஜினி" தொடங்கி "சிவகார்த்திகேயன்" வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள பிரபல "காமெடி நடிகர் மனோபாலா".இவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்" "ஊர்க்காவலன்" என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் நாயகனான சூர்யாவுடன் "பேரழகன்", "ஆதவன்", "கஜினி" போன்ற படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜயுடன் "தலைவா"," துப்பாக்கி" போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

.தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் .அந்த புகைப்படத்தில் "வைகைப்புயல் வடிவேலு" உள்ளார்.வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் வெளியாகிய "வின்னர்" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்தது. அதுவும் குறிப்பாக அந்த படத்தில் "கைப்புள்ள" என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு சிரிப்பை அள்ளி கொடுத்தார்.
மேலும் நடிகர் மனோபாலாவின் அந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலு உடன் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசையில் வெளியான "உலக நாயகன்" கமலஹாசனின் "வாழ்வே மாயம்" என்ற திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.தற்போது "நடிகர் மனோபாலா" வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.
After a very long time with vadivelu pic.twitter.com/0HosFylofs
— Manobala (@manobalam) February 13, 2021