லிங்குசாமியின் அடுத்த படத்தில் ‘கேஜிஎஃப்’ ஹீரோ: அதிரடி ஆக்சன் படம் என தகவல்

’ஆனந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இவர் கடைசியாக இயக்கிய ‘சண்டக்கோழி 2’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக மீண்டும் வலம் வர இயக்குனர் லிங்குசாமி ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை தயார் செய்து
 

லிங்குசாமியின் அடுத்த படத்தில் ‘கேஜிஎஃப்’ ஹீரோ: அதிரடி ஆக்சன் படம் என தகவல்

’ஆனந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இவர் கடைசியாக இயக்கிய ‘சண்டக்கோழி 2’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக மீண்டும் வலம் வர இயக்குனர் லிங்குசாமி ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையை கேஜிஎப் படம் புகழ் யாஷிடம் அவர் கூறியுள்ளார் என்றும் யாஷூக்கு அந்த கதை பிடித்து விட்டதை அடுத்து இந்த படம் தற்போது உருவாக உள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் உள்ள இந்த திரைப்படம் இதுவரை இந்திய திரையுலகில் வெளிவராத அளவில் அதிரடி ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது. முதல் முதலாக யாஷ் ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web