அனிருத் போட்ட லைக்: சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

 

காமெடியாக ரசிகர் ஒருவர் போட்ட டுவீட்டிற்கு அனிருத் லைக் போட்டதால் சிவகார்த்திகேயன் தரப்பில் கடும் அதிர்ச்சி அடைந்ததாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

டுவிட்டரில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் சம்பாதிக்கும் பாதி பணத்தை அனிருத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் அனிருத் இசையால் தான் அவரது படம் ஹிட்டாகி வருவதாகவும் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார் 

இந்த காமெடியான டுவிட்டருக்கு காமெடியாக அனிருத் லைக் செய்ததாகவும், இந்த லைக்கை பார்த்து சிவகார்த்திகேயன் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர்கள் தங்கள் அதிருப்தியை அனிருத்துக்கு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தனுஷுடன் அனிருத்துக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்புகளை இழந்த அனிருத், தனுஷை போலவே சிவகார்த்திகேயனும் அதே முடிவை எடுப்பாரா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்

From around the web