கையில் தீபம், நெருக்கத்தில் கணவர்: தீபாவளியை கொண்டாடிய விஜய் பட நடிகை!

 

 

விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக்கி ஜோன்ஸ் ஆகிய இருவரும் கையில் தீபத்தை வைத்தபடி நெருக்கமாக நிற்கும் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

மேலும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் பிரியங்கா சோப்ரா அதில் தெரிவித்துள்ளார். இருவரும் மிக நெருக்கமாக கையில் தீபத்துடன் வைத்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த 2018ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் நிக்கிக்கும் திருமணம் நடந்தது என்பதும் அவர் தற்போது ’தி மேட்ரிக்ஸ் 4’ என்ற ஹாலிவுட் படம் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web