போராட்டம் ஒருபக்கம் நடக்கட்டும், நீங்க ஒருபக்கம் நீட் எழுதுங்க: இயக்குனர் அமீர்!

போராட்டத்தை நாங்கள் ஒரு பக்கம் நடந்து கொள்கிறோம், நீங்கள் நீட் தேர்வை தைரியமாக எழுதுங்கள் என்று இயக்குனர் அமீர் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் 

 

போராட்டத்தை நாங்கள் ஒரு பக்கம் நடந்து கொள்கிறோம், நீங்கள் நீட் தேர்வை தைரியமாக எழுதுங்கள் என்று இயக்குனர் அமீர் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் 

நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தைரியமூட்டும் வகையில் இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

நீட் தேர்வு தமிழகத்தில் வலிய திணிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் தைரியமாக நீட் தேர்வு எழுதுங்கள். சூழ்ச்சிகளை முறியடிக்க நாம் நீட் தேர்வில் வெற்றி பெற்று நமது கனவை நிறைவேற்ற வேண்டும் 

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து நம்முடைய கடமையும் நம்முடைய பெற்றோர்களின் கனவையும் நாட்டின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றால் நீங்கள் தைரியமாக நீட் தேர்வு எழுத வேண்டும். கண்டிப்பாக உங்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே தைரியமாக எழுதுங்கள், வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார் இயக்குநர் அமீரின் இந்த வீடியோ தற்போது ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

From around the web