முன்னணி நடிகைகள் கலந்து கொள்ளாத நடிகர்களின் அறப்போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று மெளன போராட்டம் சென்னையில் நடைபெற்றது. பெயர்தான் மெளன போராட்டமே தவிர மேடையில் உள்ள அனைத்து நடிகர்களும் பேசிக்கொண்டுதான் இருந்தனர். இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக் கொண்டபோதிலும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா,
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று மெளன போராட்டம் சென்னையில் நடைபெற்றது. பெயர்தான் மெளன போராட்டமே தவிர மேடையில் உள்ள அனைத்து நடிகர்களும் பேசிக்கொண்டுதான் இருந்தனர்.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக் கொண்டபோதிலும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா ஆகிய ஒருசில நடிகைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் அனைத்து நடிகைகளும் படப்பிடிப்பு இல்லாமல் இருந்தாலும் நடிகைகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web