’மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ வெற்றி அடைய வாழ்த்திய முன்னணி நடிகர்!

 

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய 2 திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று மதியம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது/ மேலும் இந்த படங்களுக்கு கூட்டம் வருவதை வைத்து தான் மற்ற படங்களும் தைரியமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

sivakarthikeyan

இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி அடைய தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி. பொங்கலுக்கு வரும் #Master #Eeswaran இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்


 

From around the web