எம்ஜிஆர் நினைவு நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ள ‘தலைவி’ படக்குழு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே
இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கேரக்டர்கள் அரவிந்த்சாமி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகிய இருவர் கேரக்டரில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் பொருத்தமாக இருந்ததாகவும் குறிப்பாக எம்ஜிஆர் கேரக்டராகவே அரவிந்த்சாமி மாறி விட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் எம்ஜிஆர் கேரக்டர் குறித்து அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக நாளை இந்த படத்தின் எம்ஜிஆர் கேரக்டர் குறித்த பர்ஸ்ட் லூக் போஸ்டர் ஒன்று வெளியாக உள்ளது
நாளை எம்ஜிஆர் அவர்களின் நினைவு அடுத்து நாளை காலை 10 மணிக்கு இந்த போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர் என்பதும் இந்த போஸ்டர் நிச்சயம் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது
எம்ஜிஆரை மீண்டும் உயிருடன் வந்தது போல் இந்த படத்தில் அரவிந்த்சாமி அவர்கள் தத்ரூபமாக நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது