லாஸ்லியா- கவினுக்கு இந்த அவார்டுகளையும் வழங்கி இருக்கலாம்!!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது. சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர். முதல் அவார்டாக பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை மேடையில் ஏறி வாங்கிய லாஸ்லியா கீழே
 
லாஸ்லியா- கவினுக்கு இந்த அவார்டுகளையும் வழங்கி இருக்கலாம்!!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது.


சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர்.

லாஸ்லியா- கவினுக்கு இந்த அவார்டுகளையும் வழங்கி இருக்கலாம்!!முதல் அவார்டாக பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை மேடையில் ஏறி வாங்கிய லாஸ்லியா கீழே தூக்கி எறிந்துவிட்டார்.

அதன் பின்னர் தவளை விருது கவினுக்கு வழங்கப்பட்டது, அவர் எப்போது வாயை சும்மா வைத்திருந்தார், கஸ்தூரிக்கு பட்டப் பெயர் வைப்பது, சேரனை நக்கல் செய்வது, அனைத்து பெண்களிடமும் ப்ரோபோஸ் செய்வது என வாயினால்தானே கெட்டுள்ளார்.

கழுதைப்புலி விருதினை வனிதாவிற்கு பதிலாக, லாஸ்லியாவிற்கு வழங்கி இருக்கலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது, காரணம் இவர் தான் சேரன் விஷயத்தில் கோணல் மாணலாக சிந்திக்கக் கூடியவராக உள்ளார்.

மேலும் அட்டை விருது கவினுக்கு வழங்கப்பட்டிருக்கலாம், காரணம் அவர் எப்போதும் லாஸ்லியாவுடன் ஒட்டிக் கொண்டே  இருப்பார், இல்லையேல் சாண்டியிடம் ஒட்டிக் கொள்வார்.

From around the web