சூப்பர் ஸ்டாரை சந்தித்த லாரன்ஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அதி தீவிர விசிறி லாரன்ஸ். சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட நோயை சூப்பர் ஸ்டார் ஆலோசனைப்படி ராகவேந்திர ஸ்வாமியை வழிபட்டு குணம்பெற்றதால் ராகவேந்திர ஸ்வாமி மீது ரஜினிகாந்த்தை போலவே அளவு கடந்த பக்தி உள்ளவர் லாரன்ஸ். லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா சீரிஸ் படங்கள் எல்லாமே ஹிட் இதில் முனி படத்தின் தொடர்ச்சியாக வந்த காஞ்சனா படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரமான திருநங்கை பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் படம் வந்து
 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அதி தீவிர விசிறி லாரன்ஸ். சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட நோயை சூப்பர் ஸ்டார் ஆலோசனைப்படி ராகவேந்திர ஸ்வாமியை வழிபட்டு குணம்பெற்றதால் ராகவேந்திர ஸ்வாமி மீது ரஜினிகாந்த்தை போலவே அளவு கடந்த பக்தி உள்ளவர் லாரன்ஸ்.

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லாரன்ஸ்

லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா சீரிஸ் படங்கள் எல்லாமே ஹிட் இதில் முனி படத்தின் தொடர்ச்சியாக வந்த காஞ்சனா படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரமான திருநங்கை பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் படம் வந்து சில வருடங்களான நிலையில் இப்போது காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயக்குகிறார் லாரன்ஸ். லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் மும்பையில் தான் நடிக்கும் தர்பார் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

இரண்டு பேரும் ஒரே ஊரில் இருப்பதால் இருவரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

லாரன்ஸுடன் தற்போதைய காஞ்சனாவில் நடித்த வேதிகாவும் சூப்பர் ஸ்டாரை சந்தித்தார்.

From around the web