கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த லாரன்ஸ் அறக்கட்டளைக் குழந்தைகள்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார். லாரன்ஸ் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அதுதவிர தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு தன்னார்வ அமைப்பாக சினிமாப் பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் பொருளதவி மற்றும் பண உதவிகளைப் பெற்று, உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கி வந்தார். சமீபத்தில் இவர் அசோக்
 
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த லாரன்ஸ் அறக்கட்டளைக் குழந்தைகள்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

லாரன்ஸ் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அதுதவிர தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு தன்னார்வ அமைப்பாக சினிமாப் பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் பொருளதவி மற்றும் பண உதவிகளைப் பெற்று, உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த லாரன்ஸ் அறக்கட்டளைக் குழந்தைகள்!!

சமீபத்தில் இவர் அசோக் நகரில் நடத்தி வரும் ஆதரவற்றோர் அறக்கட்டளையில் உள்ள 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதியாக அவர்கள் லயோலா கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லாரன்ஸ் கூறி இருந்தார். மேலும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யவும் கூறினார்.

தற்போது லாரன்ஸ் குழந்தைகள் அனைவரும் குணம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

லாரன்ஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் மகிழ்ச்சியான செய்தியைக் கூற விரும்புகிறேன். எனது குழந்தைகள் லயோலா கல்லூரியில் 10 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்றனர். நேற்று குழந்தைகள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

இதனால் குழந்தைகள் அனைவரும் தற்போது அறக்கட்டளைக்கு குணமடைந்து திரும்பியுள்ளனர். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web