ஷிவானியை அடுத்து கேப்ரிக்கும் லவ்வா? ஆட்டையை கலைக்கும் ஆஜித்!

 

ஏற்கனவே முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் காதல் ஜோடிகள் உண்டு என்பதும் ரொமான்ஸ் காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த நான்காவது சீசனில் காதல் ஜோடிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பாலாஜி மற்றும் ஷிவானிக்கு ரொமான்ஸ் காட்சிகள் கொடுக்கப்பட்டன 

பிக்பாஸ் திரைக்கதையில் இந்த ரொமான்ஸ் காட்சிகளும் ஒன்று என்ற நிலையில் தற்போது திடீரென கேப்ரில்லாவுக்கு பாலாஜி மீது காதல் வந்துள்ளது. இதனை அடுத்து பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் ஆட்டத்தை கலைக்கின்றேன் என்று கேப்ரில்லாவின் நண்பர் ஆஜித் குறுக்கே புகுந்து வர இன்றைய இரண்டாவது புரமோ சுவராசியமாக முடிவடைந்துள்ளது.

பாலாஜியை இதுவரை ஷிவானி மட்டுமே காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது கேப்ரில்லாவுக்கு காதலா என்பது பிக்பாஸ் திரைக்கதையில் சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது ஏற்கனவே ஒரே நபரை இரண்டு பேர் காதலிக்கும் நாடகத்தை கடந்த சீசனில் நான் பார்த்துவிட்டோம் என்பதால் இந்த சீசனில் இந்த காதல் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

From around the web