கஸ்தூரிக்கு பழம்பெரும் நடிகை லதா கடும் எச்சரிக்கை

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் கூறி மாட்டிக்கொள்வது கஸ்தூரிக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. கஸ்தூரியின் கருத்துக்கள் என புத்தகமே போடும் அளவுக்கு அவரது கருத்துக்கள் ஏதாவது பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். நேற்றும் இப்படித்தான் ஜாலியான கருத்தை வெளியிடுகிறேன் என நினைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களால் வசைபாடப்பட்டார். சென்னை – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் எம்ஜிஆர், லதா நடிப்பில் வெளியான ‘பல்லாண்டு
 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் கூறி மாட்டிக்கொள்வது கஸ்தூரிக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது.

கஸ்தூரிக்கு பழம்பெரும் நடிகை லதா கடும் எச்சரிக்கை

கஸ்தூரியின் கருத்துக்கள் என புத்தகமே போடும் அளவுக்கு அவரது கருத்துக்கள் ஏதாவது பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்.

நேற்றும் இப்படித்தான் ஜாலியான கருத்தை வெளியிடுகிறேன் என நினைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களால் வசைபாடப்பட்டார்.

சென்னை – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் எம்ஜிஆர், லதா நடிப்பில் வெளியான ‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் பாடல் காட்சியை கொஞ்சம் மோசமாக குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இது எம்.ஜி.ஆர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதே வேளையில் நடிகை லதாவும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆருடன் இணைந்து நடித்த நடிகை லதா இது தொடர்பாக கூறியதாவது: அந்த காலகட்டத்தில் காதல் காட்சிகள் எவ்வளவு கண்ணியமாக படமாக்கப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். கஸ்தூரி நடித்த படக்காட்சிகள் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை என லதா கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த கருத்து நீக்கப்பட்டு விட்டு மன்னிப்பும் கோரியுள்ளார் கஸ்தூரி.

From around the web