லாஸ்லியா தந்தையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்: இறந்தது எப்படி?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் புகழ்பெற்ற லாஸ்லியா தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பிற்கு அவர் இலங்கையிலிருந்து சென்னையில் வந்து தங்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் எதிர்பாராத வகையில் திடீரென கனடாவில் மரணமடைந்து விட்டார். மரியநேசன் அவர்கள் தான் தங்கியிருந்த அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒரு சில சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் 

losliya

இந்த நிலையில் அவரது உடல் சமீபத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து தற்போது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மரியநேசன் இன் மரணம் இயற்கை மரணம் தான் என்றும் தற்கொலையோ அல்லது கொலையோ இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரியநேசன் மரணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது 

இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கனடாவிலிருந்து வரை மரியநேசன் உடல் இலங்கைக்கு வந்து விடும் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாகவும் லாஸ்லியா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

From around the web